Social Icons

  • Saturday, October 15, 2011

    7 கூடன்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம்.உதயகுமார் அவர்களின் அறிக்கை

    கூடன்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கினைப்பாளர் திரு.உதயகுமார் அவர்கள் நேற்று தெரிவித்த அறிக்கையை உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

    கூடன்குளத்தில் கடந்த இரண்டு நாட்களாக முற்றுகை போராட்டம் நடந்தது.அங்கு மக்கள் உணவருந்த சாப்படுகள் செய்யப்பட்டு அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.
    இதற்கு ஊடகங்கள் திரு.உதயகுமார் அவர்களிடம் இவ்வளவு செலவு செய்கிறீர்களே இதற்க்கெல்லாம் பணம் எங்கிருந்து வந்தது?என்று கேட்டிருக்கிறார்கள்.

    அதற்கு உதயகுமாரும் மக்கள் தான் தந்தார்கள்.வேறு யாரும் எங்களுக்கு தரவில்லை என்று கூறினார்.வெறும் 20 மக்களை(வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள மக்களை) கொண்டு இருக்கும் காமநேரி என்ற ஊர் மக்கள் 3500-ரூபாய் தந்தார்கள் எனவும் கூறினார்.

    எங்களிடம் கணக்கு வழக்கு கேட்கிறீர்களே.அப்படியென்றால் நீங்கள் உங்களது அணு உலையின் வரவு செலவு கணக்குகளை காட்டுங்கள்.என்று ஊடகத்தின் வாயிலாக கேட்டார்.ஆனால் ஊடகமோ இதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை இது வருத்தத்தை அளிக்கிறது.

    இன்னும் அவர் பல விஷயங்களை சொன்னார்.எனக்கு ஞாபகம் இருந்ததை சொல்லிருக்கிறேன்

    மேலும் இருதயம் அவர்கள் நண்பர் சூர்யாஜீவா அவர்கள் எழுதிய உண்மையா பொய்யா.. [உண்மையே] என்ற கட்டுரையில் 

    ”உண்மையாக இருக்கும் பட்சத்தில் கண்டிக்க படவேண்டியது. ஆனால் கிளப்பி விட்டார்கள் என்றால் அவர்களும் கண்டிக்கப்படவேண்டியவர்கள்”என்று கூறியிருக்கிறார்.கிளப்பி விட்டால் தானே கண்டிக்கப்படுவார்கள்.

    இந்த ஊணமுற்றோர்களை அடித்தவர் SP(Suprant of Police)இது இரவு 11 மணிக்கு நடந்தது.

    பின் அதே கட்டுரையில் நண்பர் Prabu Krishna
    ”புதிய தலைமுறை தொலைக்காட்சி, வார இதழ் கூட இதில் தன் நிலையை மாற்றிக் கொண்டதாக படித்தேன். என்ன ஆயிற்று? அது உண்மையா? இங்கே இரண்டும் கிடைப்பது இல்லை.”என்று கூறி இருக்கிறார்.

    ஆம் அதுவும் உண்மைதான்.சரியாக புதிய தலைமுறையில் 2.00 மணி அல்லது 2.30 மணிக்கு நேரடி ஒளிபரப்பு பேட்டி போட்டார்கள்.அப்போது மட்டும் திரு.உதயகுமார் அவர்கள் அளித்த பேட்டியை போட்டுவிட்டு மீதி நேரங்களிலெல்லாம் அணு உலைக்கு ஆதரவாகவே செய்திகளை போடுகின்றனர்.

    இது ஊடகங்கள் நடுநிலை தன்மையை மீறுகின்ற செயலாகும்


    Share
    எனது பதிவு பிடித்திருக்கிறதா?

    புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

    பின்தொடர

    7 comments:

    1. ஊடகங்கள் என்றும் ஆளுங்கட்சிக்கு ஜால்ரா தான் வாசிக்கும், நடுநிலை ஊடகங்கள் என்று இங்கு எதுவும் கிடையாது, வலை பூக்கள் கூட நடுநிலை என்று சொல்லாதீர்கள்... ஒன்று மக்கள் சார்பு ஊடகங்கள், மற்றொன்று அரசு சார்பு ஊடகங்கள்.. அவ்வளவே... இந்த போராட்டம் வரலாற்றில் இடம் பிடித்து உள்ளது.. வேறு எந்த போராட்டத்திற்கும் இத்தனை ஆதரவு பதிவுகளும் எதிர்ப்பு பதிவுகளும் இது வரை வந்திருக்காது என்று நினைக்கிறேன்...

      ReplyDelete
    2. ஊடகங்ககளை வன்மையாக கண்டிக்கவேண்டிய நேரமிது....

      ReplyDelete
    3. ஊடகங்கள் பெரும்பாலும் அரசு, எதாவது ஒரு அரசியல்கட்சி, அல்லது மிகப்பெரிய நிறுவனங்களின் பணபலத்தில்தான் இயங்குகின்றன. இந்த நிலைமையில் நடுநிலைமையானதாக எப்படி இயங்கமுடியும்

      ReplyDelete
    4. இந்த பிரச்சனை எப்ப தீரும் மக்களுக்கு எப்ப தீர்வு கிடைக்கும் பாவம் மக்கள்

      ReplyDelete
    5. மக்கள் சக்தியின் முன்னே அரசு மௌனித்துப் போயிருக்கிறது என்பதற்கு உதயகுமார் அவர்களின் இந்த அறிக்கையே சாட்சியாக இருக்கிறது.

      வெகு விரைவில் நல்லதோர் தீர்வு கிடைக்க வேண்டும்.

      ReplyDelete
    6. அணு உலைக்கு எதிரான போராட்டம் வெற்றி அடையட்டும்.

      ReplyDelete

     

    FaceBook Followers

    Followers