Social Icons

  • Tuesday, April 10, 2012

    5 கூடன்குளம் கேள்விகளும் உண்மைகளும் [பகுதி 2]

    vairaisathish.blogspotcom
    கேள்வி:இவ்வளவு காலமும் போராடாமல் அணுஉலை செயல்பட போகும் தருணத்தில் போராட்டம் நடத்துவது நியாயமா? பகுதி 1-ஐ படிக்க
    காவலர்களின் அராஜகம்
                                   நான் நேற்று 1989-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குஜராத் மற்றும் கல்கத்தாவில் நீண்ட அணு உலை எதிர்ப்பு பயணம் தொடங்கியது என்று கூறினேன்.
    இந்த பேரணி கன்னியாகுமரியை அடைந்த போது காவல்துறையினர் குறுக்கிட்டுஅடிதடி நடத்தினர் இதனால் பலர் காயப்பட்டனர்.காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் திரு.இயேசு இரத்தினம் ஒரு காலை இழக்க நேரிட்டது.காவலர்கள் பலர் மேல் பொய் வழக்குகள் பதிவு செய்தனர்(இப்போதும் அதைதான் செய்து கொண்டிருக்கிறார்கள்). ஆறு ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினறால் உண்மைக்கு புறம்பாக புனையப்பட்ட இந்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன

    கன்னியாகுமரி மாவட்டத்தில்
                               இதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் அய்யாவழி பால பிரஜாபதி அடிகள்,சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குமாரதாஸ்,பூமி பாதுகாப்பு சங்கம் பத்மதாஸ்,மருங்கூர் செல்லப்பா,பி.ஜே.பி.கிருஷ்ணசாமி,விவசாய சங்க உறுப்பினர்கள் பல தெருமுனை கூட்டங்களை நடத்தினர்


    நூல்கள்:
                          கூடன்குளம் அணு உலையை எதிர்த்து பல நூல்களும் கட்டுரைகளும் வெளிவந்தன.பழ.நெடுமாறன்,வைகோ,போன்ற அரசியல்வாதிகள் சென்னை ஞானி போன்ற பத்திரிக்கையாளர்கள் அணு உலைக்கு எதிராக பேசினர் எழுதினர்.
                         1.நாகஜூனன் கொல்லவரும் கூடன்குளம்” என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதினார்
                         2.தோழர் அ.மார்க்ஸ் அவர்கள் 1985-லேயே மன ஓசையில் பிரமிடுகளும் அணு உலைகளும்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதினார்.
                        3.தோழர் அஸ்வகோ ”அணுசக்தி மர்மம் தெரிந்ததும் தெரியாததும்” என விரிவான நூல் ஒன்றையும் வெளியிட்டார்.
                        4.தோழர் மு.செதிலதிபன் ”அணு உலை ஒரு சதிவலை” என்ற நூலையும் வெளியிட்டார்.

    கூடன்குளம் அணு உலைக்கு எதிராக இன்னும் போராட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.ஆனால் அரசு எதையும் கண்டுகொள்ளாமல் தான் இருக்கிறது.

    எனவே கூடன்குளம் அணு உலைக்கு எதிராக இவ்வளவு காலமும் போராடாமல் அணுஉலை செயல்பட போகும் தருணத்தில் போராட்டம் நடக்கிறது எனும் கூற்று வரலாற்று உண்மைக்கு புறம்பானது 
    Share
    எனது பதிவு பிடித்திருக்கிறதா?

    புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெற!

    பின்தொடர

    5 comments:

    1. அனைவரும் அறிய வேண்டிய தகவல்கள்... குறிப்பாக பெயர் இல்லாமல் பதில் எழுதும் விட்டில் பூச்சிகள்...

      ReplyDelete
    2. கூடங்குளம் அணுமின் நிலையத்தால் தமிழகத்திற்கு பலன் உண்டு,எனினும் அதை புரிந்து கொல்லாத மனிதர்களை என்ன செய்யலாம்

      ReplyDelete
      Replies
      1. என்ன பயன் உண்டு நண்பா.மின்சாரமா.அதிலிருந்து தமிழக்த்திற்கு கிடைக்கும் மின்சாரம் வெறும் 300 மெகாவாட் மட்டும் தான்.தமிழகத்துக்கு தேவைப்படும் மின்சாரம் 4000 மெகாவாட்

        Delete
    3. என்ன செய்வது எல்லாம் அவர்கள் கையில் தானே உள்ளது

      ReplyDelete
    4. ஜ்ப்பான் சூரிய சக்தியை நோக்கி முன்னேற

      நாம் ஆபத்தான வழிமுறைகளை நோக்கிச்செல்கிறோம்..

      ReplyDelete

     

    FaceBook Followers

    Followers